உள்நாட்டு செய்தி
தேர்தல் தினத்தன்று ஊரடங்கு உத்தரவு அமுலாகுமா..?
தேர்தல் தினத்தன்று ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தும் திட்டம் எதுவும் தற்போது இல்லை என்றும்,
அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் தயார் நிலையில் இருப்பதாகவும் பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
தேர்தல் காலத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் ஈடுபடுத்தப்படுவார்கள்,
அவர்களிற்கு தேவையான நேரத்தில் உதவுவதற்கு பாதுகாப்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பார்கள் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தும் தீர்மானம் ஜனாதிபதியிடம் மாத்திரமே உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுவரை 500 தேர்தல் பிரச்சார கூட்டங்கள் நாடாளவிய ரீதியில் இடம்பெற்றுள்ளன எந்த வன்முறையும் இடம்பெறவில்லை,
சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளில் தொடர்ந்தும் மேற்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.