உள்நாட்டு செய்தி
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைகள் ஆரம்பம்…!
நாடெங்கிலும் இன்றைய தினம் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைகள் அமைதியான முறையில் நடைபெற்றுள்ளது.குறித்த பரீட்சைக்கு சுமார் 3 இலட்சத்து 23 ஆயிரத்து 879 மாணவர்கள் நாடு முழுவதிலுமிருந்து தோற்றிவுள்ளனர்.
அந்தவகையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் ஐந்து கல்வி வலயங்களிலும் இன்றைய தினம் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு மாணவர்கள் ஆர்வத்துடன் தோற்றியதை காணமுடிந்தது.
மட்டக்களப்பு, பட்டிருப்பு,கல்குடா,மட்டக்களப்பு மத்தி, மட்டக்களப்பு மேற்கு ஆகிய கல்வி வலயங்களில் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளில் இன்றைய தினம் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைகள் நடைபெற்றன.
முல்லைத்தீவில்1957 மாணவர்கள் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றியுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் பரீட்சைக்கு தோற்றவுள்ள 1957 மாணவர்களுக்காக 24 பரீட்சை நிலையங்களில் இந்த பரீட்சை நடைபெற்றுள்ளது
அந்தவகையில் முல்லைத்தீவு கல்வி வலயத்தில் பரீட்சைக்கு தோற்றவுள்ள 1381 மாணவர்களுக்காக16 பரீட்சை நிலையங்களிலும் துணுக்காய் கல்வி வலயத்தில் பரீட்சைக்கு தோற்றவுள்ள 576 மாணவர்களுக்காக 08 பரீட்சை நிலையங்களிலுமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் பரீட்சைக்கு தோற்றவுள்ள 1957 மாணவர்களுக்காக 24 பரீட்சை நிலையங்களில் இந்த பரீட்சை இடம்பெற்றுள்ளது