உள்நாட்டு செய்தி
சர்வதேச நாணய நிதியத்தின் முக்கிய அறிவிப்பு..!
இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் பின்னர் அடுத்த மீளாய்வு நடத்தப்படும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில், நேற்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அதன் பேச்சாளர் ஜூலி கொசக் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அடுத்த தேர்தலில் வெற்றி பெறுபவரை இலங்கை மக்களே தீர்மானிக்க வேண்டும் என ஜூலி கோசாக் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிறகும் எங்களின் பணிகள் குறித்த விவாதங்களைத் தொடருவோம். இலங்கை வரலாற்றில் ஏற்பட்டுள்ள மோசமான நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான வாய்ப்பை வழங்குவதே இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் நோக்கமாகும்.
அத்துடன், இலங்கை நிதி நெருக்கடியில் இருந்து விடுபடவில்லை எனவும், நிதி நெருக்கடியில் இருந்து நாட்டை மீள்வதற்கு ஆதரவை வழங்குவது தனது பொறுப்பாகும்.
இருப்பினும், நிதி முன்னேற்றத்தில் இன்னும் பலவீனம் இருப்பதால் சீர்திருத்த வேகத்தைத் தக்கவைத்துக்கொள்வது அவசியமாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.