உள்நாட்டு செய்தி
77% வாக்காளர் அட்டைகள் விநியோகம்
ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் சுமார் 77% இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதுவரை சுமார் ஒரு கோடியே 32 லட்சம் வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்தார்.
நாளையும் நாளை மறுதினமும் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை வீடு வீடாகச் சென்று விநியோகிக்கவுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமைக்குள் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் கிடைக்காவிட்டால், 18ஆம் திகதிக்கு பின்னர் தமது பகுதியில் உள்ள தபால் நிலையத்திற்குச் சென்று அடையாளத்தை உறுதிப்படுத்தி வாக்காளர் அட்டைகளை பெற்றுக்கொள்ளலாம் எனவும் தேர்தல் நாள் வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்