உள்நாட்டு செய்தி
வைத்தியர்கள் பணி புறக்கணிப்பு..!
பதுளை பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் தமது சங்கத்தின் பிரதி செயலாளர் பாலித்த ராஜபக்ஷவிற்கு எதிராக முன்னெடுக்கப்படும் ஒழுக்காற்று நடவடிக்கையை நிறுத்தக் கோரி, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளனர்.
எதிர்வரும் 18ஆம் திகதி நாடளாவிய ரீதியாக பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது