அரசியல்
அநுரகுமாரவிற்கு வாக்களிக்கத் தவறுவோருக்கு மறைமுக வன்முறை அச்சுறுத்தல் !
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு வாக்களிக்கத் தவறுவோர் வன்முறையை எதிர் நோக்க வேண்டியிருக்கும் என்பதையே, அநுரவின் அண்மைய உரை மறைமுகமாக வெளிப்படுத்துவதாக தேசபிரேமி ஜனதா பலவேகயவின் தலைவர் சுகத் ஹேவா பத்திரன குற்றஞ்சாட்டியுள்ளார்.
நேற்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் இதனை தெரிவித்த அவர், மேலும் குறிப்பிடுகையில், அண்மையில் வடக்கில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசார கூட்டத்தில், அதன் வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க, வடக்கிலுள்ள தமிழ் சமூகம் தென்னிலங்கையின் வாக்குப்பதிவு முறையை பின்பற்றி தனக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் அவ்வாறு செய்யத் தவறினால் வடக்கிலுள்ள தமிழர்கள் பின் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் இனதுருவமுனைப்பு ஏற்பட்டால், இனவாத மோதல் ஏற்படலாம்
என்பதே அநுரவின் மறைக்கப்பட்ட செய்தியாகும் என சுகத் ஹேவாபத்திரன தெரிவித்துள்ளார்.
தேசபிரேமி ஜனதா பலவேகயவின் தலைவர் சுகத் ஹேவாபத்திரன, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது