உள்நாட்டு செய்தி
ஆட்டோவிலிருந்து குழந்தையின் உடல் மீட்பு….!
அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட என்போல்ட் தோட்டப்பிரிவில் ஆட்டோ ஒன்றில் இருந்து குழந்தையின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த குழந்தையின் உடல் நேற்று (09.09.2024) இரவு மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோவில் துர்நாற்றம் வீசியதால் தோட்ட மக்கள் ஆட்டோவில் சென்று பார்த்துள்ளனர்.
இதன்போது, கறுப்பு பொலித்தீன் உறையில் போடப்பட்டு சிவப்பு துணியொன்றில் சுற்றி மறைக்கப்பட்ட நிலையில் இருந்த குழந்தையின் சடலத்தை கண்டு அக்கரப்பத்தனை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.