உள்நாட்டு செய்தி
திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த பெண் கைது..!
இரத்மலானையில் பகுதியில் தங்கம் நகைகள் மற்றும் பொருட்கள் திருடி வந்த பெண் ஒருவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் வீட்டு வேலை செய்வதாகவும், வீடுகளில் வேலை இருப்பதாக பத்திரிகைகளில் வரும் விளம்பரங்களை பார்த்து அந்தந்த வீடுகளுக்கு சென்று பொருட்களை திருடிச் செல்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண்ணுக்கு எதிராக தெஹிவளை, ஹொரணை மற்றும் மிரிஹான பொலிஸ் நிலையங்களில் பல திருட்டு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சந்தேகநபரால் திருடப்பட்ட 2 தங்க வளையல்கள், 2 தங்க நெக்லஸ்கள் மற்றும் தங்க பெண்டன்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.