முக்கிய செய்தி
சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிட தீர்மானம்..!
2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாதத்திற்குள் வெளியிட எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இன்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இறுதி கட்டத்தில் உள்ளதாகக் குறிப்பிட்டார்.
சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
அந்தப் பரீட்சை பெறுபேறுகளை இம்மாதத்திற்குள் வழங்கத் தயாராக உள்ளோம்.
எனது தேவை மிக விரைவில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிட வேண்டும் என்பதே.
இந்நிலையில் பல்வேறு சோதனைகளில் ஈடுபட்டுள்ளோம்.
மற்றும் இறுதி முடிவுகளின் தயாரிப்பு இன்னும் சில நாட்களில் வெளியிட முடியும் என்று நான் நினைக்கிறேன்.
இந்த முடிவுகளை செப்டம்பர் மாதத்தில் வழங்குவோம்.
எனவே அனைத்து மாணவர்களும் தயார் நிலையில் இருந்து கொள்ளுங்கள்.
என அவர் மேலும் தெரிவித்தார்.
அனைத்து மாணவர்களுக்கும் உடனடியாக பகிர்ந்து கொள்ளுங்கள்.