உள்நாட்டு செய்தி
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு முக்கிய அதிகாரிகளுக்கு அழைப்பு…!
இரணைமடு நீர்ப்பாசன செய்கை தொடர்பில் முரசுமோட்டை கமக்காரர் அமைப்பின் விவசாயிகள் செய்த முறைப்பாடு தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு முக்கிய அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
அழைப்பு கடிதத்தில் எதிர்வரும் திகதி அன்று 10 மணிக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு – யாழ்ப்பாண பிராந்திய காரியாலயத்திற்கு சமூகமளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, கிளிநொச்சி மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள கமநல அபிவிருத்தி உத்தியோகஸ்தர், கிளிநொச்சி கமநல அபிவிருத்தி திணைக்கள பிரதி ஆணையாளர், கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் ஆகியோரை உள்ளடக்கி இந்த கடிதம் வரையப்பட்டுள்ளது.