உள்நாட்டு செய்தி
உரத்தின் விலையை குறைக்க தீர்மானம்..!
விவசாயிகளின் பல கோரிக்கைகளுக்கு அமைய உரத்தின் விலையை குறைப்பதற்கு அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
திருகோணமலை, மொரவக்கவில் இடம்பெற்ற ‘புலுவன் ஸ்ரீலங்கா’ பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர், இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, அரசாங்கம் 50 கிலோகிராம் உர மூட்டையின் விலையை 4000 ரூபாயால் குறைக்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விடயம் விவசாயத் துறைக்கு மிகவும் தேவையான நிவாரணம் வழங்கும் என்று அமைச்சர் கூறியுள்ளார்