உள்நாட்டு செய்தி
தபால் மூல வாக்குகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூல வாக்குகள் இடம்பெற்ற தினங்களில் இதுவரையில் பாரதூரமான சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் அதிக சதவீதத்தினர் தபால் மூல வாக்குகளை பயன்படுத்தியமை அவதானிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும் ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பின் மூன்றாம் நாள் இன்றுடன் நிறைவடைந்துள்ளது.
எனினும், வாக்களிக்க முடியாத அரச ஊழியர்களுக்கு 11ஆம் மற்றும் 12ஆம் திகதிகளில் அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது