உள்நாட்டு செய்தி
அனுராதபுரத்தில் விபத்து தாய், மகள் ஸ்தலத்தில் பலி…!
அனுராதபுரத்தில் ஏற்பட்ட கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எப்பாவல – கெக்கிராவ பகுதியிலுள்ள அருகில் பொலிஸ் சார்ஜன்ட் ஓட்டிச் சென்ற வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
நேற்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் 3 வயதுடைய குழந்தை படுகாயமடைந்து அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எப்பாவல பொலிஸார் தெரிவித்தனர்.