உள்நாட்டு செய்தி
சம்பள உயர்வு தொடர்பான அறிவிப்பு..!
ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல்மூல வாக்களிப்பு ஆரம்பமாகவுள்ள நிலையில், அரச சேவையாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் தீர்மானம் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
தேர்தல் ஆணையகத் தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கை என்ற பெப்ரல் அமைப்பு, இந்த விடயத்தை ஆராயுமாறு வலியுறுத்தியுள்ளது.
அரசாங்க ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படுவதில் தமக்கு ஆட்சேபனை இல்லை. எனினும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, அதுவும் அஞ்சல் மூல வாக்களிப்புக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறித்தே, தாம் அதிருப்தி அடைவதாக பெப்ரல் குறிப்பிட்டுள்ளது.