உள்நாட்டு செய்தி
“சர்வமத வழிபாடுகளுடன் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரங்களை ஆரம்பித்தார் ஜீவன் தொண்டமான்”
2024 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் கௌரவ ரணில் விக்ரமசிங்ஹ அவர்களை ஆதரிப்பதாக, இ.தொ.கா தேசிய சபை ஏகமனதாக தீர்மானித்திருந்தது.
இந்நிலையில் இ.தொ.கா வின் பொதுச் செயலாளரும், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் அவர்கள் இன்றைய தினம் (03) சர்வமத வழிபாடுகளுடன் தனது தேர்தல் பிரச்சாரங்களை ஆரம்பித்தார்.
இவ் வழிபாட்டு நிகழ்வுகளில் அமைச்சர் ஜீவன் தொண்டமான், இ.தொ.கா தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஸ்வரன், தேசிய அமைப்பாளர் சக்திவேல், உபத்தலைவர் பிலிப்குமார், உபத்தலைவர் அர்ஜுன் ஜெயராஜ், அமைச்சரின் செயலாளர் தயாளன் குமாரசுவாமி உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.