உள்நாட்டு செய்தி
வர்த்தகர்களை குறிவைத்து பெருந்தொகை பணமோசடி..!
பொது பரிசோதகர்கள் போன்று அடையாளப்படுத்தி வர்த்தகர்களுக்கு தொலைபேசி அழைப்புக்களை மேற்கொண்டு சிலர் பண மோசடியில் ஈடுபடுவதாக தகவல் கிடைத்துள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவிக்கையில்,
“பொது சுகாதார பரிசோதகர்கள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பிற அரச அதிகாரிகள் போல் நடித்து வர்த்தகர்களுக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி பணம் மோசடி செய்த பல வழக்குகள் பதிவாகியுள்ளன.
கடந்த காலங்களிலும் இதுபோன்று பல்வேறு வர்த்தகர்கள் மற்றும் தனிநபர்கள் பணம் மோசடி செய்த சம்பவங்கள் குறித்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொலிஸார் தலையிட்டு இதுபோன்ற மோசடி செய்த பலருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர். தற்போது நாடு முழுவதும் மீண்டும் இந்த மோசடி பல இடங்களில் இடம்பெறுவதாக தகவல் கிடைத்துள்ளது.
ஏற்கனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்து சட்ட நடவடிக்கை எடுத்துள்ளோம். பொதுச்சுகாதார பரிசோதகர் என்று கூறிக்கொண்டு பதவி வேறுபாடின்றி பணம் கேட்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்களை வேண்டிக்கொள்கின்றோம்