உள்நாட்டு செய்தி
தேர்தல் பணியாளர்களுக்காக ஆணையாளர் விடுத்த கோரிக்கை நிராகரித்த நிதியமைச்சு
தேர்தல் பணிக்காக ஆட்சேர்ப்பு செய்யப்படும் பொதுத்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் மற்றும் பிற கொடுப்பனவுகளில் இருந்து முன்கூட்டிய தனிநபர் வருமான வரிக்கு(APIT) விலக்கு வேண்டும் என்ற தேர்தல் ஆணையகத்தின் கோரிக்கையை நிதி அமைச்சு நிராகரித்துள்ளது.
இந்த வரி விலக்கைக் கோரி தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் சிறி ரத்நாயக்க, நிதி அமைச்சின் செயலாளருக்கு ஒகஸ்ட் 13ஆம் திகதி கடிதம் எழுதியிருந்தார்.
எனினும் இது சட்டத்திற்கு எதிரானது என்பதால், அத்தகைய விலக்குகளை வழங்க முடியாது என்று திறைசேரியின் அதிகாரி தெரிவித்துள்ளார்.