Connect with us

உள்நாட்டு செய்தி

கடனை மீளச் செலுத்த முடியாத நிலையில் பெண் தற்கொலை..!

Published

on

வட்டிக்கு கடன் பெற்ற இளம் குடும்பப் பெண்ணொருவர் கடனை மீளச் செலுத்த முடியாத நிலையில் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.

யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம் பகுதியைச் சேர்ந்த வயது 28 என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த பெண் மீற்றர் வட்டிக்கு கடன் பெற்று கடை ஆரம்பித்துள்ளார். இருப்பினும் வியாபாரம் இல்லாத நிலையில் கடையினை மூட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், வாங்கிய கடனை அடைக்க முடியாமையினால், கடன் வழங்குனர்களால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

இந்நிலையில் இன்றையதினம் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *