உள்நாட்டு செய்தி
எரிப்பொருள் விலையில் மாற்றமா..!
2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்படவிருந்த நிலையில் ஆகஸ்ட் மாதம் பெட்ரோல் விலை குறையம் என மக்கள் எதிர்பார்த்திருந்தனர். எனினும், அரசாங்கம் தேர்தலுக்காக அதனைச் செய்யவில்லை என இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
தேர்தல் மேடைகளில் பல்வேறு உறுதிமொழிகளை வேட்பாளர்கள் அள்ளி வழங்குகின்றனர். நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார சூழ்நிலையில் இவை நடைமுறைச் சாத்தியமானதா என்பது பற்றி அவர்கள் சிந்திப்பதில்லை.
நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியின் மத்தியில் மேற்கொள்ளக் கூடிய விடயங்களை நாம் ஒழுங்குமுறைப்படுத்தியுள்ளோம்.
ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்படவிருந்த நிலையில் ஆகஸ்ட் மாதம் பெட்ரோல் விலை குறையம் என மக்கள் எதிர்பார்த்திருந்தனர். எனினும், அரசாங்கம் தேர்தலுக்காக அதனைச் செய்யவில்லை.
அனைத்து விடயங்களையும் முன்னெடுப்பதற்கான சிஸ்டம் ஒன்றைத் தயாரித்துள்ளது. இந்த முறைமையின் அடிப்படையிலே நாம் செயற்பட்டு வருகின்றோம்.