வானிலை
காலநிலையில் மாற்றம்..!
காலநிலையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்ப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
சூரியனின் தொடர்பான தென்திசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக, இவ் வருடம் நேற்று(28.08.2024) முதல் செப்டம்பர் மாதம் 06ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது.
இதன்படி இன்று(29.08.2024) நண்பகல் 12.11 அளவில் பலப்பிட்டி, ஒட்டுசுட்டான், மாங்குளம், தேரங்கண்டல் மற்றும் மல்லாவி ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேநேரம், வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படக்கூடும். மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் சில பகுதிகளில் 50 மில்லி மீற்றர் வரை ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிவித்துள்ளது