உள்நாட்டு செய்தி
ஜனாதிபதிக்கு எதிரான மனு நிராகரிப்பு..!
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட, ஜனாதிபதி தகுதியற்றவர் என அறிவிக்குமாறு தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்தது.
நீதிமன்ற கட்டணத்தை மனுதாரர் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவு
மனுதாரர் நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தியுள்ளார்: சட்டமா அதிபர் நீதிமன்றத்தில் தெரிவிப்பு
பதில் பொலிஸ் மா அதிபரை நியமிக்கத் தவறியமை மற்றும் உயர் நீதிமன்றத்திற்கும் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கும் நீதியரசர்களை நியமிக்காமை என்பவற்றின் அடிப்படையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தகுதியற்றவர் என அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை, விசாரணைக்கு எடுத்துக்கொள்வதை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. நீதிமன்றக் கட்டணமாக 50,000 ரூபாய் செலுத்துமாறும் மனுதாரருக்கு உத்தரவிடப்டப்டுள்ளது.
சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே, மனுதாரர்கள் நீதிமன்றத்திற்கு பொய்யாக தகவல்களை சமர்ப்பித்துள்ளதாகவும், அந்த மனு அரசியலமைப்பின் 92 ஆவது சரத்தை மீறுவதாகவும் இதன் போது ஆட்சேபனை தெரிவித்தார்.