உள்நாட்டு செய்தி
அடையாளமில்லாத 23 ஜனாதிபதி வேட்பாளர்கள்…!
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பலர் மாயமாகி உள்ளதாக ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் கற்கைகளுக்கான நிறுவனம் தெரிவித்துள்ளது.
அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி போட்டியிடும் 38 வேட்பாளர்களில் 15 பேர் மட்டுமே தேர்தல் பிரசாரக் கூட்டங்களை ஏற்பாடு செய்துள்ளதாக, நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
சில ஜனாதிபதி வேட்பாளர்களை தொடர்பு கொள்ளாத முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிலர் தேர்தலில் போட்டியிடுவதாக பகிரங்கமாக அறிவிக்கவில்லை என்றும் பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்