உள்நாட்டு செய்தி
கடவுச்சீட்டுகளை வழங்க நடவடிக்கை..!
இன்று (28) முதல் 1,000 கடவுச்சீட்டுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என குடிவரவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடவுச்சீட்டு பெற தங்கியிருப்பவர்களுக்கு டோக்கன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அத்தியாவசிய காரணங்கள்
குடிவரவுத் திணைக்களம் வசம் வைத்திருக்கும் வெற்று கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டதால், குடிவரவுத் திணைக்களத்தின் பிரதான அலுவலகத்திற்கு முன்பாக வரிசைகள் அமைக்கப்பட்டன.
இவ்வாறானதொரு பின்னணியிலேயே புதிய இலத்திரனியல் கடவுச்சீட்டு அறிமுகம் செய்யப்படும் வரை ஒக்டோபர் மாதம் வரை இந்நிலை தொடரும் என்பதால் அத்தியாவசிய காரணங்களுக்காக மாத்திரம் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்குமாறு திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.