Connect with us

உள்நாட்டு செய்தி

ஓய்வுதியம் தொடர்பான முக்கிய அறிவிப்பு..!

Published

on

      

கண்டி மாவட்டத்தில் உள்ள 20 பிரதேச செயலக செயலகங்களில் 209 ஓய்வூதியதாரர்களுக்கு கொடுப்பனவு மற்றும் சம்பளமாக ஐந்து கோடியே ஐம்பது இலட்சம் ரூபாய் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2023 ஆம் ஆண்டுக்கான தேசிய கணக்காய்வு அறிக்கையில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின்படி, இந்த தொகையில் கிட்டத்தட்ட மூன்று மில்லியன் ரூபாய் வரை கடந்த ஆண்டு மீட்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தவிர, வெளிநாடுகளில் உள்ள 118 ஓய்வூதியதாரர்களுக்கு 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் 14  பிரதேச செயலகங்கள் மூலம் 33 இலட்சம் ரூபாய்க்கு மேல் கொடுப்பனவு வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *