உள்நாட்டு செய்தி
இலங்கையில் (AI) தொழில்நுட்பத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்..!
நாட்டில் (AI) தொழில்நுட்பம் தொடர்பான தேசிய மூலோபாயத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
டிஜிட்டல் மாற்றப் பாதையில் கணிசமான முன்னேற்றத்தை அடைந்துள்ள போதிலும், உலகளாவிய செயற்கை நுண்ணறிவில் இலங்கையால் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில், இலங்கையில் செயற்கை நுண்ணறிவுக்கான தேசிய உத்திகள் தயாரிக்கப்பட்டு, செயற்கை நுண்ணறிவுக்கான ஒரு தளத்தை இலங்கையில் உருவாக்குவது 2030ஆம் ஆண்டளவில் நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பின்னடைவில் ஒரு கணிசமான மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது