உள்நாட்டு செய்தி
அரச உத்தியோகத்தர்களின் சம்பள அதிகரிப்பு..!
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் உட்பட அரச ஊழியர்களுக்கு 24% முதல் 35% வரையிலான சம்பள அதிகரிப்பு, சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்வதுடன், 2025 ஜனவரி 1 ஆம் திகதி வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளில் சம்பள அதிகரிப்புக்கான நிதியைப் பெறுவதற்குத் தேவையான அனைத்து கணக்கீடுகளும் நடவடிக்கைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக நிகழ்வொன்றின் போது அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த உயர்வின் மூலம், அரசு ஊழியரின் குறைந்தபட்ச சம்பளம் அடுத்த ஆண்டுக்குள் 55,000 ஆக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.