உள்நாட்டு செய்தி
கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பிலான முக்கிய அறிவிப்பு..!
கடவுச்சீட்டிற்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கும் முறை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கி கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிக்கும் ஒன்லைன் முறை நாளை முதல் நிறுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய வருகை முறைக்கமைய, அமைய கடவுச்சீட்டுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் மேலும் தெரிவிக்கின்றார்.
அண்மைக்காலமாக கடவுச்சீட்டு விநியோகத்தில் ஏற்பட்ட முறுகல் நிலையை அடுத்து இந்த நடைமுறை நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.