Connect with us

அரசியல்

சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனம் நாளை வெளியிடு…!

Published

on

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.

கொழும்பில் நாளை (28) தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை எதிர்க்கட்சி தலைவர் வெளியிடவுள்ளார்.

இதேவேளை நேரம் மற்றும் கொழும்பில் எந்த இடம் என்ற விபரம் விரைவில் அறிவிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் நடவடிக்கைகளின் தலைவர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனம் சமூக சந்தைப் பொருளாதார அமைப்பிற்குள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி, விவசாயம், டிஜிட்டல் மயமாக்கல், சுகாதாரம், தொழில்முனைவு மற்றும் கூட்டுறவு அமைப்பு உட்பட பல்வேறு துறைகளில் கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.