உள்நாட்டு செய்தி
நாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் நீரில் மூழ்கி 7 பலி…!
நாட்டில் கடந்த 1 நாளில் மட்டும் நீரில் மூழ்கி 7 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போகமுவ தெதுரு ஓயாவில் நேற்று பிற்பகல் நீராடச் சென்ற இரண்டு ஆண் பிள்ளைகளும் அவர்களுடைய தாயும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
தற்போது அவர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை மாரவில – குருசா தேவாலயத்திற்கு அருகில் கடலில் நீராடிக் கொண்டிருந்த இளைஞனும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
கல்பிட்டி இலுப்பத்தீவில் தோட்ட வேலை செய்து கொண்டிருந்த 65 வயதுடைய ஒருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
மேலும் இத்தேபான – மேல் கந்தயகிரல பிரதேசத்தில் உள்ள அதவெதுன்வெவ நீர் குளியலில் குளிப்பதற்கு சென்ற இரண்டு பொதுச் சுகாதார பரிசோதகர்களும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்