உள்நாட்டு செய்தி
தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பித்தவர்களுக்கான அறிவிப்பு….!
தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பம் அனுப்பி, அவை கிடைக்கப் பெறாதவர்களுக்கு விசேட கடிதம் ஒன்று வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக இந்த விசேட கடிதம் வழங்கப்படும் என ஆட்பதிவு திணைக்களத்தின் தென் மாகாண உதவி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
ஒருநாள் சேவையின் ஊடாக தென் மாகாண காரியாலயத்தில் 300 தேசிய அடையாள அட்டைகள் நாள்தோறும் விநியோகிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
நாட்டின் எந்தவொரு பாகத்தில் வசிப்பவரும் இதற்காக விண்ணப்பம் அனுப்ப முடியும் என குறிப்பிட்டுள்ளதோடு, சாதாரண சேவையின் ஊடாக வருடமொன்றுக்கு 40000 முதல் 45000 தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.