அரசியல்
“செல்வம் நிறைந்த நாடு அழகான வாழ்வு” அநுரவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு
ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க “செல்வம் நிறைந்த நாடு அழகான வாழ்வு” என்னும் தொனிபொருளிலான தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை இன்று (26) வெளியிட்டுள்ளார்.
வெளியீட்டு விழா
இந்நிகழ்வின் போது, தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, கொள்கைப் பிரகடனம் குறித்து சபைக்கு விளக்கமளித்துள்ளார்.
தேர்தல் விஞ்ஞாபனமானது சுமார் 233 பக்கங்களை கொண்டுள்ளது.
இதன்போது, மதத் தலைவர்கள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள், சுனில் ஹந்துநெத்தி, நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய உட்பட தேசிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி (JVP) ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர்