உள்நாட்டு செய்தி
250 கடவுச்சீட்டுகளும் வழங்க தீர்மானம்….!
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இணையப் பதிவு முறையை நீக்கிய பின்னர் கடவுச்சீட்டுகளைப் பெறுவதற்கான புதிய முறையை, இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி, கடந்த ஆகஸ்ட் 23 ஆம் திகதி முதல் கடவுச்சீட்டுக்களுக்கு விண்ணப்பிக்க பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.
குடிவரவுத் திணைக்களத்திற்கு வருகை தரும் வரிசையின் அடிப்படையில் ஒரு நாள் சேவையின் கீழ் ஒரு நாளைக்கு 400 கடவுச்சீட்டுகளும், சாதாரண சேவையின் கீழ் 250 கடவுச்சீட்டுகளும் வழங்கப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.