உள்நாட்டு செய்தி
மின்சாரம் தாக்கி மாணவன் பலி…!
மின்சாரம் தாக்கிப் பாடசாலை மாணவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் அனுராதபுரம், கலென்பிந்துனுவெவ பகுதியில் நேற்று (25) இடம்பெற்றுள்ளது.
மேற்படி மாணவன் தனது வீட்டின் பின்புறம் உள்ள குளியல் அறையில் குளித்துக்கொண்டிருந்தபோது, தண்ணீர் எடுப்பதற்காக மின் மோட்டார் இயக்கப்பட்டுள்ளது.
மின் மோட்டாரில் பொருத்தப்பட்டிருந்த கம்பியில் அவரது ஆடைகள் வைக்கப்பட்டிருந்த நிலையில், அவர் குளித்துவிட்டு ஆடைகளை எடுக்க முற்பட்டபோது மின்கம்பி அறுந்து உடலில் சுற்றியதில் மின்சாரம் தாக்கிச் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.