உள்நாட்டு செய்தி
இலங்கையில் ஆரம்பிக்கவுள்ள புதிய விமான சேவை..!
தனியார் முதலீட்டில் “Air Ceilao” என்ற பெயரில் மற்றுமொரு விமான சேவை ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மத்திய கிழக்கு மற்றும் ஆசிய நாடுகளுக்கு பயணம் செய்து பின்னர் ஐரோப்பாவுக்கான விமான சேவையை ஆரம்பிப்பதே இவர்களின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை விமான நிறுவனத்தை ஸ்தாபிப்பது தொடர்பான நடவடிக்கைகள் சிவில் விமான சேவை அதிகார சபையுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.