உள்நாட்டு செய்தி
22 இலட்சம் ரூபா பெறுமதியான சிகரெட்டுகள் பறிமுதல்…!
சட்டவிரோதமான முறையில் 22 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை இலங்கைக்கு கொண்டு வந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சிகரட்டுக்களை எடுத்துச் செல்ல முற்பட்ட போதே சுங்க அதிகாரிகளால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் அபுதாபியில் இருந்து விமான நிலையத்திற்கு வந்துள்ளதுடன், அவர் பன்னிபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 44 வயதான வர்த்தகர் என தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபரிடம் இருந்து 21,600 வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.