உள்நாட்டு செய்தி
மன்னாரில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை..!
மன்னார் மாவட்டத்தில் டெங்கு பரவல் அதிகரித்த நிலையில் காணப்படுவதாகவும், மாவட்டத்தில் டெங்கு நுளம்பின் தாக்கத்தை கட்டுப்படுத்த துரித நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வருகிறநிலையில் அவற்றை கட்டுப்படுத்துவது தொடர்பான அவசர கலந்துரையாடல் இன்று(23) காலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.