உள்நாட்டு செய்தி
சாரதி அனுமதிப்பத்திர ரத்து தொடர்பான முக்கிய அறிவிப்பு..!
புதுப்பிக்கப்படாத அனைத்து சாரதி அனுமதிப் பத்திரங்களையும் ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் முற்றிலும் தவறானவை என்றும், இதுவரை புதுப்பிக்கப்படாத சுமார் 2 மில்லியன் சாரதி அனுமதிப் பத்திரங்கள் தொடர்பான தகவல்களை புதுப்பிப்பதற்காக புதிய முறையொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும், அதற்கான பணிகள் நடைபெற்று வருவதோடு, இந்த ஆண்டு இறுதிக்குள் அந்தப் பணி நிறைவு செய்யப்படும் என்றும் ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சின் செயலாளர் பொறியியலாளர் ரஞ்சித் ரூபசிங்க தெரிவித்தார்.