உள்நாட்டு செய்தி
இலங்கை போக்குவரத்துச் சபையின் அறிவிப்பு..!
பேருந்து பற்றாக்குறை தொடர்பில் ஜனாதிபதி தேர்தல் பிரசாரக் கூட்டங்களினால், வழமையான போக்குவரத்திற்கு இதுவரை எவ்வித இடையூறும் ஏற்படவில்லை என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தல் பிரசாரக் கூட்டங்களுக்காக இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இருப்பினும் பேருந்துகள் பற்றாக்குறை தொடர்பில் பொதுமக்களிடமிருந்து எவ்வித முறைப்பாடுகளும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என சபையின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.