உள்நாட்டு செய்தி
யாழில் ஒரு வயதுக் குழந்தை மரணம்…!
யாழில் காய்ச்சல் காரணமாக ஒரு வயதுக் குழந்தை ஒன்று பரிதாபமாக உயரிழந்துள்ளது.
தம்பாட்டி, ஊர்காவற்துறை பகுதியைச் சேர்ந்த குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த குழந்தைக்கு பிற்பகல் ஒரு மணியளவில் காய்ச்சல் ஏற்பட்டது.
இந்நிலையில் 21ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குறித்த குழந்தை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி குழந்தை 21ஆம் திகதி இரவு 11 மணியளவில் உயிரிழந்தது.