உள்நாட்டு செய்தி
குடும்பத்தகராறு காரணமாக மனைவி மகன் கொலை…!
தந்தை தனது மனைவியையும் மகனையும் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் படுகாயமடைந்த மனைவி உயிரிழந்துள்ளார்.
குடும்ப தகராறு காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
நிவித்திகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலவான வீதி, தேல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான கணவன், மனைவி (38), 18 வயதுடைய மகன் மற்றும் 08 வயதுடைய மகள் ஆகியோர் வசித்து வந்ததுடன் குடும்ப தகராறு காரணமாக நேற்று (21) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த மனைவி மற்றும் மகன் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மனைவி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
பின்னர், பொலிசார் வீட்டைச் சோதனையிட்ட போது, சந்தேக நபரான 48 வயதுடைய கணவர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.