முக்கிய செய்தி
உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோக திட்டம்…!
உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் செப்டெம்பர் 3ஆம் திகதி முதல் விநியோகிக்கப்படும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தலுக்காக 17,140,354 உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை அச்சிடும் பணி ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், செப்டெம்பர் 8 ஆம் திகதி உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது