Connect with us

முக்கிய செய்தி

அரச ஊழியர்களுக்கு சம்பளத்தை அதிகரிக்க அனுமதி…!

Published

on

2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அனைத்து அரச ஊழியர்களுக்குமான சம்பளத்தை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அரச சேவையில் உள்ள சம்பள முரண்பாடுகளைத் தீர்க்க நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் தலைவர் உதய செனவிரத்ன தெரிவித்தார். கல்வித் தகைமை, அனுபவம், பொறுப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, கடைநிலை ஊழியர்களுக்கு 24 வீதமும், உயர் நிலை அதிகாரிகளுக்கு 24 முதல் 50 வீதத்திற்கும் மேல் வரையான சம்பள அதிகரிப்பை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.