உள்நாட்டு செய்தி
பாடசாலைகளில் AI திட்டம் – அமைச்சரவை அங்கீகாரம்..!
தெரிவு செய்யப்பட்ட 100 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களின் பங்கேற்புடன் ஏ.ஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவை மாணவர் முன்னோடித் திட்டமாக நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
குறித்த பாடசாலைகளில் 6ஆம் தரத்திலிருந்து 9ஆம் தரம் வரையில் பயிலும் மாணவர்கள் இந்தத் திட்டத்தில் உள்வாங்கப்படவுள்ளனர்.
அதன் ஆரம்ப நடவடிக்கைகளின் முடிவுகளின் அடிப்படையில், எதிர்காலங்களில் ஏனைய பாடசாலைகளிலும் இந்த திட்டம் விஸ்தரிக்கப்படுவதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.