Connect with us

உள்நாட்டு செய்தி

9 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருமானம்

Published

on

      

இலங்கைக்கு இந்த வருடத்தின் கடந்த 6 மாதங்களில் 9 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருமானம் கிடைத்துள்ளதாக முதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

அத்துடன், கடந்த ஆறு மாதங்களில்  இலங்கை சுமார் 800 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான முதலீடுகளுக்கான உடன்படிக்கைகளை ஏற்படுத்திக்கொண்டிருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

‘இரண்டு வருட முன்னேற்றமும் எதிர்காலமும்’ என்ற தலைப்பில்  (21) ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம,

“இலங்கை முதலீட்டுச் சபை பதினைந்து முதலீட்டு வலயங்களுக்கான வசதிகளை வழங்குவதுடன் அந்த முதலீட்டு வலயங்களில் தற்போது 1575 நிறுவனங்கள் செயற்பாட்டுப் பணிகளை முன்னெடுத்து வருகின்றன. இதில் 500,000 இற்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர்.

தற்போதைய அரசாங்கத்தின் புதிய முதலீட்டுத் திட்டத்தின் கீழ் ஏழு புதிய முதலீட்டு வலயங்களை நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளது.

மாங்குளம், பரந்தன், காங்கேசன்துறை, திருகோணமலை, இரணைவில, ஹம்பாந்தோட்டை, பிங்கிரிய ஆகிய பிரதேசங்களைச் சுற்றி இந்தப் புதிய முதலீட்டு வலயங்களை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *