உள்நாட்டு செய்தி
டெங்கு குறித்த மக்களுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை…!
நாட்டில் காலநிலை காரணமாக டெங்கு நோய் அதிகரிக்கக்கூடிய வாய்ப்பு நிலவக்கூடும் என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் 34, 906 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் மேல் மாகாணத்திலேயே அதிகளவானோர் பதிவாகியுள்ளனர்.
அதன்படி, மேல் மாகாணத்தில் இதுவரையில் 14, 248 பேர் டெங்கு நோயுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட 16 பேர் உயிரிழந்துள்ளனர்.