உலகம்
ரஷ்யாவில் பாரிய நிலநடுக்கம்!
ரஷ்யாவின் கிழக்கே உள்ள கடல் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் இன்று (18) அதிகாலை ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கம் பசிபிக் பெருங்கடலில் நிலநடுக்கம் அடிக்கடி ஏற்படும் பகுதியில் ஏற்பட்டுள்ளதுடன், முதல் நிலநடுக்கத்திற்கு பிறகு பல நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நிலநடுக்கத்தையடுத்து அமெரிக்க தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி ஏற்பட வாய்ப்பில்லை என அறிவித்துள்ளது.
மேலும் இந்த கடற்பகுதியில் பல எரிமலைகள் உள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன