உள்நாட்டு செய்தி
துண்டாகிய கையை பொருத்தி யாழ்.போதனா வைத்தியர்கள் சாதனை…!
யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த மாதம் கை துண்டிக்கப்பட்ட நிலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் ஒருவருக்கு நெடுநேர சத்திர சிகிச்சையின் பின்னர் மீண்டும் கை பொருத்தப்பட்டு சிகிச்சைகள் பெற்று வீடு திரும்பியுள்ளார்.
குறிப்பிட்ட சத்திர சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்ட வைத்திய நிபுணர்கள் ,வைத்தியர்கள் , தாதியர்கள் , மற்றும் உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் வைத்தியசாலை சமூகம் சார்ந்த நன்றிகளை தெரிவித்து முகநூலில் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.