உள்நாட்டு செய்தி
இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு…!
2025 மார்ச் மாதம் வரையில் இலங்கையின் பணவீக்கம் எதிர்பார்த்த இலக்கை விடவும் குறைவான மட்டத்தில் இருக்கும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மின்சாரம், எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களின் விலைகள் காரணமாக, நாட்டின் பணவீக்கம் எதிர்வரும் 7 மாதங்களுக்கு 5 சதவீதத்திலும் குறைந்த மட்டத்தில் காணப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாதகமற்ற புள்ளிவிவரங்களின் விளைவுகளின் அடிப்படையில், கடந்த ஜூலை மாதத்தில் பணவீக்கம் 1.7 சதவீதத்திலிருந்து 2.4 சதவீதமாக அதிகரித்தது.