உள்நாட்டு செய்தி
ஜனாதிபதி வாக்காளர்களிடம் விடுத்துள்ள வேண்டுகோள்…!
எரிபொருள், எரிவாயும் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் இல்லாது கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்திருந்தோம். இன்று அந்த நிலையிலிருந்து மீண்டு வருகிறோம். பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் எமது திட்டங்களை முன்னோக்கிக் கொண்டுசெல்வதன் ஊடாகவே நெருக்கடியிலிருந்த விடுபட முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.இன்று வியாழக்கிழமை வேட்புமனுவை தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.
2022 ஆம் ஆண்டு ஜுலை மாதம் ஜனாதிபதி செயலகத்தையும், அலரிமாளிகையும், ஜனாதிபதி மாளிகையையும் கைப்பற்றினர். எனது வீட்டை தீயிட்டனர். அப்படியான ஒரு சூழலில்தான் நான் நட்டை பொறுப்பெற்றேன்.2022 ஆம் ஆண்டு கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருந்தோம். எரிபொருள், எரிவாயு உட்பட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாது மக்கள் வரிசையிலிருந்த யுகத்தக்கு முடிவு கட்டியுள்ளோம்.ஏற்பட்டுள்ள இந்த ஸ்திர நிலையை முன்னோக்கி கொண்டு செல்வதன் ஊடாகவே நாம் வெற்றிபெற முடியும். அதற்காக மக்கள் என்னை ஆதரிக்க வேண்டும் என்றார்.