முக்கிய செய்தி
இன்று இந்தியாவின் 78 ஆவது சுதந்திர தினம்…!
இந்தியாவின் 78 ஆவது சுதந்திர தினம் இன்று இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. கொழும்பில் நடைபெற்ற இக்கொண்டாட்டங்களின் பிரதான நிகழ்வு இந்திய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான இந்திய இல்லத்தில் நடைபெற்றிருந்தது.
இந்திய தேசியக் கொடியினை ஏற்றி வைத்த உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, அணிவகுப்பு மரியாதையினையும் பார்வையிட்டிருந்தார். அத்துடன் 78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய குடியரசுத் தலைவரால் நாட்டு மக்களுக்காக ஆற்றப்பட்ட உரையின் சுருக்கங்களும் உயர்ஸ்தானிகரால் இச்சந்தர்ப்பத்தில் வாசிக்கப்பட்டது.
இலங்கையின் சமாதானம் மற்றும் ஐக்கியத்தினை நிலை நிறுத்துவதற்காக அதியுயர் தியாகம் செய்த இந்திய படையினரை நினைவு கூரும் இந்திய அமைதி காக்கும் படையினரின் நினைவுத்தூபியில் உயர்ஸ்தானிகரும் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் ஏனைய அதிகாரிகளும் அஞ்சலி செலுத்தி இருந்தனர்.